திங்கள், 9 பிப்ரவரி, 2015

புரியாத புதிர்' மாயன் இன மக்கள்

புரியாத புதிர்' மாயன் இன மக்கள்

உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து,அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விடமாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா? 
சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரேஇரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள்மறைந்தால்….?
 
ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்றஅனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்தஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
 






ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம்வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும்தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
 
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குகிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள்பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
 
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும்எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவைஅவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
 
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர்பின்வாங்கத் தொடங்கினார்கள்.
 
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
 






சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்தசுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
 
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம். ஒன்று விடாமல் பார்க்கலாம். அவற்றை நீங்கள் அறிந்துகொண்டால், இதுவரை பார்த்திராத, கேட்டிராத, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.
 
அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா!..


CONTINUE TO READ <<CLICK>> THIS LINK..
'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-1
'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2

புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3

புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-5.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.

'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-7. 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

ஜம் ஜம் கிணறு.[உலகில் இது ஒன்று தான் மெய்யான அற்புதமாகும்]


ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை இடவேளையின்றி ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. 


நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் 'ஜம் ஜம்' கிணற்றில் இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தும், அப்போதும் இதன் அளவு குறைவதில்லை. சுவையும் மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும். 



 எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.


ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.


மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது ..
click this link <<click>>